News September 27, 2024
அனில் கும்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை, அஸ்வின் படைத்துள்ளார். இந்தியா-வங்கதேசம் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இன்று ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், அனில் கும்ளேவின் (419 W) முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆசிய அளவில், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முரளிதரன் (612 W), அஸ்வின் (420 W), கும்ளே (419 W) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
Similar News
News August 25, 2025
சிறையில் இருந்தே அரசை நடத்த வேண்டுமா? அமித்ஷா

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிறை செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கும் போக்கு உருவாகியுள்ளதாக அமித்ஷா சாடியுள்ளார். சிறையில் இருந்தே யாராவது அரசை நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News August 25, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17510524>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. மத்திய பிரதேசம்.
2. தொடை எலும்பு (Femur)
3.1982
4. அரசமரம்
5. சாய்னா நேவால் (2012)
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 25, 2025
விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.