News September 27, 2024
மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு: அன்புமணி

தமிழ்நாடு அரசு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமனி கூறியுள்ளார். குறிப்பாக, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதாகவும், இதனால் மின் வாரியத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென கூறியுள்ளார்.
Similar News
News November 4, 2025
சென்னை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் நேற்று (3.11.25) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 4, 2025
நாளை பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு 12 வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை நாளை( 4-11-2025) காலை 10.30 மணியளவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார் ஏப்ரல் மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி முன்கூட்டியே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News November 3, 2025
நவ.06 தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வரும் 6ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெறும். தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் நாடாளுமன்ற சட்டமன்ற பிரதிநிதி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


