News September 27, 2024
மணல் திருடிய 6 மாட்டுவண்டிகள் பறிமுதல்

விண்ணமங்கலம் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து இன்று ஆற்று மணல் கடத்தி கொண்டு ஆரணி சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நெசல் கூட்ரோடு அருகே வந்த 6 மாட்டு வண்டிகளை ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மாட்டு வண்டிகளை ஆரணி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
தி.மலை: பாலத்தில் மதுகுடித்தவர் கீழே விழுந்து சாவு

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகு நாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவர், அந்த பகுதியில் உள்ள சிறு பாலத்தின் மீது அமர்ந்து மதுகுடித்த போது, தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த ஆரணி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 24, 2025
தி.மலையில் விக்ரம் பிரபு சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடிகர் விக்ரம் பிரபு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.
தொடர்ந்து கோவில் ஊழியர்கள் மற்றும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வந்த பக்தர்கள் நடிகர் விக்ரம் பிரபுவுடன் குழு புகைப்படம் மற்றும் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
News August 24, 2025
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, தாமரைக்குளம், பச்சையம்மன் கோவில் குளம், சுகநதி, இறையூர் ஏரி, தென்பெண்ணையாறு, பூமா செட்டிகுளம், கோனேரியான்குளம், பையூர் பாறைக்குளம் மற்றும் காட்ராண்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.