News September 27, 2024
செங்கல்பட்டு மாவட்ட அரசு ஊழியர்களுக்கு போட்டி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதில், 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆவலுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில், வெற்றி பெறுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். நீங்க கலந்து கொண்டீர்களா?
Similar News
News August 19, 2025
ரூ.2.5 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த பெண் தற்கொலை

தாம்பரம், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வனஜா (38) யூடியூபில் பார்த்து, கணவருக்குத் தெரியாமல் ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கடன் செயலியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் கொடுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அவர், வாட்ஸ்அப் மூலம் கணவருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News August 19, 2025
செங்கல்பட்டு: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

செங்கல்பட்டு மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <
News August 18, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.