News September 27, 2024

MONKEY POX: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

image

குரங்கு அம்மை தடுப்பு குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சந்தேகத்திற்கிடமான, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 13, 2025

தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

image

ChatGPT-ல் ஒரு கேள்விக் கேட்டால், நொடியில் பதில் சொல்கிறது. சிம்பிளா இருந்தாலும் இந்த AI-யின் பின்னணி சிக்கலானது. தினம் கோடிக்கணக்கான கேள்விகளை பிராசஸ் செய்ய, தகவல்கள் சேமிக்க மாபெரும் டேட்டா மையங்கள் தேவை. இவற்றுக்கு அபரிமிதமான மின்சாரம் தேவை. இந்த (நீர்)மின்சாரம் தயாரிக்க தண்ணீர் தேவை. அவ்வகையில், உங்களின் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல 10 ml தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே.

News August 13, 2025

முதல் மனைவியுடன் மாதம்பட்டி.. குழப்பமா இருக்கே?

image

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில் 2-வது திருமணம் செய்தது சர்ச்சையானது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே அவர் 2-வது திருமணம் செய்திருப்பதாகவும், முதல் மனைவி கோர்ட்டை நாடவுள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில், தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதனால், 2-வது மனைவியுடன் சண்டையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னவா இருக்கும்?

News August 13, 2025

பாகிஸ்தான் தான் எங்க கூட்டாளி… USA-வின் மெசேஜ்

image

பாகிஸ்தானில் இயங்கும் BLA அமைப்பு, அதன் ஆயுதப் பிரிவான மஜீத் பிரிகேட் இரண்டையும் பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்கா இப்போது அறிவித்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் இதை அறிவிப்பது, பாகிஸ்தானுக்கு ஆதரவை தெரிவிப்பது மட்டுமல்ல, தனது கூட்டாளி பாக்., தான் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதற்காகவும் தான் என்கின்றனர் சர்வதேச நோக்கர்கள்.

error: Content is protected !!