News September 27, 2024
கூட்டணியில் இருந்து திருமாவை பிரிக்க முடியாது: திமுக

கூட்டணியில் இருந்து திருமாவை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக தெரிவித்துள்ளது. திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அளித்துள்ள பேட்டியில், கூட்டணி குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்து அவரின் சொந்த கருத்து. அதற்கு பதில் சொல்ல முடியாது என்று கூறினார். திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி. அதில் இருந்து திருமாவை பிரிக்கலாம் என்ற அதிமுக போன்ற கட்சிகளின் கனவு நனவாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News August 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 13, 2025
FASTag பாஸ்: அப்ளை செய்யும் முறை

வரும் 15-ம் தேதி முதல் <<17363704>>FASTag<<>> பாஸ் கிடைக்கும். இதை ‘Rajmarg Yatra’ என்ற மொபைல் ஆப் அல்லது NHAI இணையதளத்தில் விண்ணப்பித்து பெறலாம். உங்கள் வாகன எண் / பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பயன்படுத்தி லாக்-இன் செய்யவும். பின், ₹3,000 கட்டணம் செலுத்தவும். அதன்பின், உங்களின் இப்போதைய FASTag உடன் இதை லிங்க் செய்துகொள்ளவும். இதை செய்யும்போது, உங்களின் பழைய FASTag ஆக்டிவாக இருக்க வேண்டியது அவசியம்.
News August 13, 2025
தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

ChatGPT-ல் ஒரு கேள்விக் கேட்டால், நொடியில் பதில் சொல்கிறது. சிம்பிளா இருந்தாலும் இந்த AI-யின் பின்னணி சிக்கலானது. தினம் கோடிக்கணக்கான கேள்விகளை பிராசஸ் செய்ய, தகவல்கள் சேமிக்க மாபெரும் டேட்டா மையங்கள் தேவை. இவற்றுக்கு அபரிமிதமான மின்சாரம் தேவை. இந்த (நீர்)மின்சாரம் தயாரிக்க தண்ணீர் தேவை. அவ்வகையில், உங்களின் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல 10 ml தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே.