News September 27, 2024

16 செல்வங்களும் அளிக்கும் அற்புத வழிபாடு!

image

காவிரி பாயும் பெருமை வாய்ந்த தஞ்சையின் கஞ்சனூரில் அமைந்துள்ளது ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் திருக்கோயில். இந்த திருத்தலத்தில் தேவகுருவின் வழிகாட்டலில், சகல தேவர்களும் கூடி, நோம்பிருந்து, யாகம் நடத்தி திருமகளை திருமாலோடு சேர்த்து வைத்ததாக புராணம் கூறுகிறது. அழகு, ஆடம்பர வாழ்க்கையை அருளும் சுக்கிரனின் ஸ்தலமான இங்கு சென்று ஸ்ரீலக்ஷ்மி ஹோமம் செய்து வழிபட்டால், 16 செல்வப் பேறுகளும் கிட்டும் என்பது ஐதீகம்.

Similar News

News August 13, 2025

3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

image

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் முயற்சியின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ₹10.32 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் போதிய இடவசதி கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் IT பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

News August 13, 2025

கவர்ச்சி கேரக்டர்களுக்கே அழைக்கிறார்கள்: பூஜா

image

இந்தி சினிமாவில் தன்னை கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பதாக நடிகை பூஜா ஹெக்டே வேதனை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தான் நடித்த படங்களை அவர்கள் பார்க்கவில்லை என தான் நினைப்பதாகவும் கூறினார். ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரமாக தன்னை மாற்றிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

News August 13, 2025

சின்னசாமி மைதானத்துக்கு தொடரும் சோதனைகள்

image

செப்.30-ம் தேதி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் துவங்குகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இத்தொடரின் போட்டிகளை திருவனந்தபுரத்திற்கு மாற்ற BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறை அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கம் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!