News September 27, 2024
புதுச்சேரியில் ரூ.8 கோடி மீட்பு

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சைபர் க்ரைம் போலீசார் இந்தாண்டில், ஆன்லைன் மோசடி இழப்பு தொகை 35 கோடியே, 17 லட்சத்து, 96 ஆயிரத்து, 143 ரூபாய். இதில் ரூ.8 கோடியே, 81 லட்சத்து, 53 ஆயிரத்து, 179 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்தாண்டில் சைபர் கிரைம் மோசடியில், 3 ஆயிரத்து, 712 புகார்கள் பெறப்பட்டு, ரூ.8 கோடியே 81 லட்சத்து53 ஆயிரத்து 179 ரூபாய் மீட்டனர்.
Similar News
News September 15, 2025
காரைக்காலில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் (15.09.2025) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். மேலும் இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
News September 14, 2025
புதுச்சேரி: தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சி

புதுச்சேரி அரசின் சுற்றுலா துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறையுடன், உலக அமைதி அறக்கட்டளை, ஸ்ரீ அரவிந்தோ மந்திர், நபியோத்வீப் அமைப்புகள் இணைந்து (செப்டம்பர் 14) இன்று தனியார் ஓட்டலில் ஒருநாள் தேசிய கருத்தரங்கை நடத்தின. முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்கள்.
News September 14, 2025
புதுவை: எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா பொட்டலங்கள்!

தெலுங்கான மாநிலம் கச்சிகுடாவில் இருந்து புதுவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில், போலீசார் ரெயில் பெட்டிகளை சோதனை செய்த போது சாக்கு பை ஒன்று கிடந்தது. போலீசார் அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.