News September 26, 2024
சற்று நேரத்தில் வெளியே வருகிறார் செந்தில் பாலாஜி!

பண மோசடி வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஜாமீன் நடைமுறைகளை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வரவுள்ளார். அவரை வரவேற்பதற்காக புழல் சிறை வாசலில் நூற்றுக்கணக்கான திமுகவினர் மலர் மாலைகள், பட்டாசுகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Similar News
News August 12, 2025
என் சாவுக்கு காதலனே காரணம்.. உயிரை விட்ட பெண்

‘எனது சாவிற்கு காதலன் ரமீஸும், அவரது குடும்பமுமே காரணம். மதம் மாறச் சொல்லி என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்கள்.’ கேரளா எர்ணாகுளத்தில் டீச்சர் டிரைனிங் மாணவி சோனா(23) தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய வரிகள் இவை. வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்த அவருக்கு நடந்த கொடுமைகள் அவரது உயிரையே பறித்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், ரமீஸை கைது செய்து விசாரித்து வருகிறது.
News August 12, 2025
BREAKING: 4 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல்

ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ₹4,600 கோடி மதிப்பீட்டில் 4 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உ.பி.,யின் லக்னோவில் Phase-1B மெட்ரோ திட்டத்திற்காக ₹5,801 கோடியும், அருணாச்சலில் 700 மெகா வாட் மின் திட்டத்திற்காக ₹8,146 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
மீண்டும் சரிந்த இந்தியப் பங்குச்சந்தைகள்!

நேற்று(ஆக.11) ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(ஆக.12) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிந்து 80,235 புள்ளிகளிலும், நிஃப்டி 97 புள்ளிகள் சரிந்து 24,487 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. Reliance, Infosys, TCS, HDFC Bank, M&M உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?