News September 26, 2024
சாதிய வன்முறை பகுதிகள் மதுரையிலேயே அதிகம்

தமிழகத்தில் சாதிய வன்முறை பகுதிகள் மதுரையிலேயே அதிகம் இருப்பதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக சமூகநீதி மற்றும் மனித உரிமைத்துறை பதிலளித்துள்ளது. அதில் மதுரையில் 45 பகுதிகள், நெல்லையில் 29, திருச்சியில் 24, தஞ்சையில் 22, தேனியில் 20 பகுதிகள் சாதிய வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதிகள் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.
News August 12, 2025
இப்படி செய்வது தொழில் தர்மமா.. நீங்க சொல்லுங்க!

HR ஒருவரின் போஸ்ட் நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பதிவில், தங்கள் ஆபிஸில் வேலை செய்யும் Employee ஒருவர், தனது முதல் சம்பளம் வந்த 5 நிமிடங்களிலேயே வேலையை ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒருவரை பல கட்ட Interview-களுக்கு பிறகு, தேர்வு செய்து வேலை கொடுத்தால், இப்படி செய்வது தொழில் தர்மமா? எனவும் அவர் கேட்கிறார். நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க?
News August 12, 2025
ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி

முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது அவர் எப்போது முருகராக மாறினார் என்ற கேள்வி எழுவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம், முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ₹2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.