News September 26, 2024

இளம்வயது திருமணத்துக்குச் சென்ற அனைவா் மீதும் நடவடிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடத்தினால், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் போலீசால் FIR பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார். இளம் வயது திருமணங்களை 1098 எண்ணில் புகார் செய்யலாம் என்றும், அதற்கான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Similar News

News August 24, 2025

தி.மலை பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்

▶️தி.மலை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்04175-232845

▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441

▶️ Toll Free 1800 4252 441

▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126

▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756

இந்த தகவலை அனைவருக்கும்SHARE பண்ணுங்

News August 24, 2025

ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. முதல் நாள் மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமையிலும், இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையிலும் நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஒளவை அருள் சிறப்புரை பேசுகிறார்.

News August 24, 2025

தி.மலை வருவாய்த்துறை சங்கங்களின் கோரிக்கை மாநாடு

image

திருவண்ணாமலையில் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மாநாடு (ஆக. 23) நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி பளுவை குறைத்தல், தனி ஊதியம் வழங்குதல், வெளிமுகமை, தொகுப்பூதிய நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

error: Content is protected !!