News September 25, 2024
மூடப்படும் ‘டாஸ்மாக்’ கடைகள்.. விரைவில் பட்டியல்

தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். விரைவில் மூடப்படும் கடைகள் பட்டியல் வெளியிடப்படும் என் கூறிய அவர், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில், கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஒரே நாளில் மதுக்கடைகளை மூடினால், மிகப் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News August 12, 2025
‘மாரீசன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

‘மாரீசன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் திருடனுக்கும், மறதி நோயாளிக்கும் இடையேயான பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஷங்கர், வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஃபகத் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 12, 2025
மூட்டு எலும்புகளை வலுவாக்கும் ‘தடாசனா வின்யாசனம்’

✦இது முதுகெலும்பை சீராக வைக்கவும், தோள்கள், இடுப்பு & முழங்கால்கள் எலும்புகளை வலுவாக்கும்
✦கால்களை ஒன்றாக சேர்த்து, கைகளை உடல் ஒட்டியபடி வைக்கவும். கைகளை ‘T’ வடிவில் உயர்த்தவும்.
➥கால்களை கொஞ்சம் வளைத்து, இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து நிற்கவும்.
➥10- 15 விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News August 12, 2025
தேமுதிகவின் கூட்டணி கணக்கு.. சீட் பேரம்..

ஜெ.,வுடன் தான் இருக்கும் புகைப்படத்தால் பரபரப்பு தொற்றியதால் அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்போது இல்லை என்று பிரேமலதா விளக்கமளித்தார். ஆனால், எல்.கே.சுதீஷ் போட்டோவை வெளியிட்டதற்கு பின்னால், அரசியல் காரணம் இல்லாமல் இல்லை. அதிமுகவின் கதவு திறந்து இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, திமுக அல்லது தவெகவிடம் கூடுதல் சீட் பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.