News September 25, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 13, 2025
விழுப்புரம் மாணவன் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம் தனியார் பள்ளியில் மோகன்ராஜ் என்ற மாணவன் மயங்கி விழுந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 17 வயது மாணவன் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு குறித்த முன் அறிகுறிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிய வரும், ஆதாலால் தான் மாணவன் அதனை உணரவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News August 13, 2025
விழுப்புரம்: ஊர்க்காவல் படையில் காலி பணியிடங்கள்!

விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்காவல் படையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலிபணியிடங்களை நிரப்ப கோட்டகுப்பம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஆண்களிடமிருந்து ஆகஸ்ட் 15 முதல் 25 தேதி வரை விருப்ப மனுக்கள் வரவேற்கபடுகின்றன. எனவே, தகுதியான நபர்கள் வருகிற 25ஆம் தேதிக்குள் காவல் துணை கண்காணிப்பாளர், ஆயுதப்படை, காகுப்பம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என விழுப்புரம் எஸ்.பி.ப.சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
விழுப்புரத்தில் தரமற்ற குடிநீர் – 16 நிறுவனங்கள் மீது வழக்கு

விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஆக.13) நடைபெற்றது. இந்நிலையில் குடிநீர் பாட்டில் உற்பத்தி மற்றும் தண்ணீரின் தரம் குறித்து எடுத்துரைத்ததோடு தரமற்ற தண்ணீர் பாட்டில் தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்