News September 25, 2024
நெல்லையில் தடை உத்தரவு: போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

நெல்லை மாநகரப் பகுதியில் இன்று முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 15 தினங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுக்கூட்டம், பொது இடங்களில் தேவை இன்றி கூடுதல், ஆர்ப்பாட்டம், தர்ணா போன்றவை அனுமதியின்றி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா அறிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
நெல்லையில் 20 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

நெல்லை அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதற்காக விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிடமாறுதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 167 பேர் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 20 பேருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
காவல்துறைக்கு வருவதற்கு காரணம் என் மனைவி – துணை காவல் ஆணையர்

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஒரு வார புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் பேசினார். அவர் கூறியதாவது; தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் மாணவிகள் வெற்றி பெறலாம். மருத்துவத்துறையில் இருந்து காவல்துறைக்கு வந்ததற்கு என் மனைவியின் ஆதரவு முக்கிய காரணம் என்றார்.
News July 4, 2025
நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுத உள்ள 36,000 தேர்வர்கள்

நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 12ஆம் தேதி நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்டத்தில் 108 இடங்களில் 132 மையங்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 36 ஆயிரத்து 11 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையத்தின் நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்படும் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.