News September 25, 2024
இறக்குமதி கொள்கையை டிச.,31 வரை நீட்டித்த அரசு!

லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதன வன்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி மேலாண்மை முறையை DGFT டிச. 31 வரை நீட்டித்துள்ளது. அதன் அறிக்கையில், “2025 ஜனவரி முதல் இறக்குமதி செய்யவுள்ள நிறுவனங்கள் தங்களது இறக்குமதியின் அளவு & மதிப்பை அரசிடம் பதிவு செய்து, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, அவற்றுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
காமெடி நடிகர் காலமானார்

பிரபல பஞ்சாபி காமெடி நடிகர் ஜஸ்விந்தர் பல்லா (65) வயதில் காலமானார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை ஹாஸ்பிடலில் அவர் உயிர் பிரிந்தது. ஜஸ்விந்தர் பல்லா தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு & மறக்கமுடியாத கதாபாத்திரங்களால் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகராக திகழ்ந்தார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News August 24, 2025
சுனில் கவாஸ்கருக்கு மும்பை கிரவுண்டில் ஆளுயர சிலை!

மும்பை வான்கடே மைதானத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் Ex ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1972- 1987 வரை இந்திய அணிக்காக விளையாடிய சுனில் கவாஸ்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஆயிரம் அடித்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்களை(34) அடித்தது என தனது காலக்கட்டத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 24, 2025
விஜய்யை பற்றி சீமான் கூறியது உண்மை: பிரேமலதா

விஜய்யை நாங்கள் தம்பி என அழைப்பதாலேயே அவருடன் கூட்டணி வைப்போம் என்று அர்த்தமில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோதும், உடல்நலக் குறைவுடன் இருந்தபோதும் தெரியாத விஜயகாந்த், மறைந்த பிறகே விஜய்க்கு அண்ணனாக தெரிவதாக சீமான் கூறியது உலகறிந்த உண்மை என கூறியுள்ளார். தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு பேசியுள்ளார்.