News September 25, 2024
மாதம் ₹4,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழுக்கு தொண்டாற்றிய முதியோர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் ₹4,000 (3,500 + ₹500 மருத்துவப்படி) உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 58 வயது நிரம்பியோர் உரிய ஆவணங்களுடன், தமிழ் வளர்ச்சிதுறை அலுவலகத்தில் அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.31.
Similar News
News August 12, 2025
விஜய் வாய் திறந்துவிட்டாரா? தமிழிசை கிண்டல்

எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தமிழிசை, ‘பரவாயில்லையே ஒருவழியாக தம்பி விஜய் வாய் திறந்துவிட்டாரா’ என கிண்டலாக பதிலளித்தார். போராடும் தூய்மைப்பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியிருக்கிறார்; கூட்டம் வரும் கூட்டம் வரும்னு வெளிய வராம இருந்தா அப்புறம் எதுக்கு அவரு அரசியல் கட்சி தலைவர்? முதலில் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கட்டும் என்றார்.
News August 12, 2025
BREAKING: தங்கம் விலை ₹640 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை, 2-வது நாளாக இன்றும் தாறுமாறாக குறைந்து ₹74 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 குறைந்து ₹74,360-க்கும், கிராமுக்கு ₹80 குறைந்து ₹9,295-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News August 12, 2025
சீனாவுக்கு மீண்டும் 90 நாட்கள் அவகாசம் கொடுத்த டிரம்ப்

சீனாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மேலும் 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வர்த்தக போரால் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145% வரியை விதித்திருந்தது. பதிலுக்கு சீனாவும் வரியை உயர்ந்த, உலக நாடுகளுக்கு பாதிப்பு சந்தித்தன. இதையடுத்து இரு நாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்கள் நிறுத்தி வைத்திருந்த நிலையில் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.