News September 25, 2024

இந்தியாவின் வெற்றி இவர்கள் கையில்தான்

image

பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியாவின் வெற்றி ரோஹித், கோலி, ஜெய்ஷ்வால், கில் கையில்தான் இருப்பதாக Ex வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். இந்த முறை பும்ரா, ஷமி, சிராஜ் என சிறப்பான பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி செல்வதாக கூறிய அவர், அவர்கள் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுப்பார்கள் என்றார். மேலும், பவுலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News August 11, 2025

5 பந்துகளில் அபார வெற்றி… அசத்தல்!

image

U-19 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றில், ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அர்ஜென்டினா – கனடா இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அர்ஜென்டினா அணி 19 ஓவர்கள் விளையாடி வெறும் 23 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கனடா பவுலர் ஜக்மதீப் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். சிறிய இலக்கை விரட்டிய கனடா அணி, வெறும் 5 பந்துகளில் 24 ரன்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது.

News August 11, 2025

பழைய ஓய்வூதிய திட்டம்: கருத்து கேட்கும் TN அரசு

image

வரும் 18-ம் தேதி முதல் செப்.9-ம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு கருத்து கேட்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News August 11, 2025

பொது இடங்களில் மது அருந்துவோரை தடுங்க: HC

image

பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் விரைவாக ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு பிரச்னை செய்வோர் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோரால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!