News September 24, 2024
ராணிப்பேட்டையில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டையில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருவதால், அது இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 11, 2025
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டையில், வரும் நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.
News November 11, 2025
ராணிப்பேட்டை: BE படித்தால் சூப்பர் வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 11, 2025
ராணிப்பேட்டை: சாலை விபத்தில் விஏஓ பலி!

ராணிப்பேட்டை: சக்கரமல்லூர் கிராம நிர்வாக அலுவலராக முத்துக்குமார்(42) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பைக்கில் செல்லும் போது ஸ்பீட் பிரேக்கரில் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று(நவ.11)அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


