News September 24, 2024

அரசு மருத்துவமனை பாதுகாவலர் மீது தாக்குதல்

image

அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பாதுகாவலராக பணியில் உள்ளார். இந்நிலையில் நேற்று வார்டில் சண்டையிட்டவர்களை வெளியே செல்ல கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ் குமார், முனீஸ்வரன், முத்துக்குமார், மகாலிங்கம் ஆகிய 4 பேர் சேர்ந்து பாதுகாவலர் விஜயகுருவை தாக்கினர். இது தொடர்பாக கிழக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News October 20, 2025

விருதுநகர் மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

image

விருதுநகர் மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: அருப்புக்கோட்டை:04566-240101, ராஜபாளையம்:04563-220101, சாத்தூர்:04562-264101, சிவகாசி: 04562-220101, ஸ்ரீவி.,: 04563-265101, விருதுநகர்:04562-240101 இங்கு <>க்ளிக் செய்யுங்க<<>>.. மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க.

News October 20, 2025

விருதுநகர்: மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயற்சி

image

விருதுநகர் டிசிகே பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரின் கடைக்கு நேற்று காலை வந்த பட்டு ராஜா அரை பவுனில் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார். வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

News October 20, 2025

விருதுநகரில் 61 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்

image

விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து தொடர்ந்து 61 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சருடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 61 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

error: Content is protected !!