News September 24, 2024
நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு

போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, தமிழகத்தில், போலீஸ், ரவுடிகள், அரசியல்வாதிகள் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வழக்கு விசாரணை ஒன்றில் ஐகோர்ட் வேதனை தெரிவித்திருந்தது.
Similar News
News August 14, 2025
ஸ்டாலின் தொகுதியில் 9,000 போலி வாக்குகள்: பாஜக

BJP அரசு, ECI உடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், 2021 தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை என அனுராக் சிங் தாக்குர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவற்றில் 9,133 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 14, 2025
உயராத தங்கம் விலை

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,320-க்கும், கிராமுக்கு ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், இன்று உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News August 14, 2025
இரவில் கைது.. கொந்தளித்த விஜய்

அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில், திமுக அரசு இரவோடு இரவாகக் கைது செய்துள்ளதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையை மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு என சாடிய அவர், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.