News September 24, 2024
மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழிகள்

*சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட உலகில் துன்பகரமானது எதுவும் இல்லை.
*இருளை இருளால் விரட்ட முடியாது, ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
*சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும்.
Similar News
News April 27, 2025
130 அணு ஆயுதங்கள் தயார்.. பாக். அமைச்சர் மிரட்டல்

பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால் இந்தியா போருக்குத் தயாராக வேண்டும் என பாக். அமைச்சர் ஹனீஃப் அபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்களிடம் உள்ள 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும், ஆனால் அவை எங்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.
News April 27, 2025
விஜய்யுடன் கைகோர்க்கிறதா பாமக? புது ரூட்டில் ராமதாஸ்

தவெக உடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA-ல் பாமக அங்கம் வகிக்கும் நிலையில், ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலில் விஜய் உடன் கைகோர்க்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், NDA-ல் தனது பேர வலிமையை கூட்டுவதற்காக, பாமக கையிலெடுத்த அஸ்திரமே விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்கிறார்கள் விமர்சகர்கள்.
News April 27, 2025
பாக்.க்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? Ex ஜெனரல் புது தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா
-பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஒருவேளை பாக்.க்கு ஆதரவாக சீனா களமிறங்கினால், அது 3-வது உலகப் போரின் தொடக்கமாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்நிலையில், இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், சீனா தலையிடாது என Ex ஜெனரல் ராணா பிரதாப் கலிதா தெரிவித்துள்ளார். USA-வின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதில் கவனம் செலுத்தாது என்றார்.