News September 23, 2024

பரிகாரம் செய்வதாக நடித்து மோதிரம் திருட்டு

image

காரமடை காந்திநகரை சேர்ந்த உமாவதி இன்று வீட்டிலிருந்த போது அங்கு வந்த பொள்ளாச்சியை சேர்ந்த செல்வராஜ், விஜய் உள்ளிட்டோர் ஜோசியம் பார்க்க வந்துள்ளதாகவும், தோஷம் உள்ளது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பி பரிகாரம் செய்ய 1.6 கிராம் தங்க மோதிரத்தை கொடுத்துள்ளார். பின், உமாவதி அசந்த நேரத்தில் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இப்புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News August 7, 2025

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கண்காட்சி

image

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் 11 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சியர், பவன்குமார் திறந்து வைத்து பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06.08.2025) வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், மண்டல அளவில் பதிவுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!