News September 23, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 485 மனுக்கள் குவிந்தது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுநலன் சார்ந்த 446 மனுக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அளித்த 36 மனுக்கள் என மொத்தமாக 485 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News September 8, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய செப்டம்பர் 8 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ மதிப்பீட்டில் வெங்காயம் ரூபாய் 30 தக்காளி ரூபாய் 25 உருளைக்கிழங்கு ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 30 வெண்டைக்காய் ரூபாய் 40 சுரைக்காய் ரூபாய் 20 அவரைக்காய் ரூபாய் 60 கத்தரிக்காய் ரூபாய் 40 பச்சை மிளகாய் ரூபாய் 50 முட்டைக்கோஸ் ரூபாய் 25 என விற்பனை ஆகிறது என்று நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார்.

News September 8, 2025

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் மானிய நிலையை எளிதாக அறிய வழி

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News September 8, 2025

கள்ளக்குறிச்சி பெயர் கரணம் தெரியுமா…?

image

இந்தப் பகுதியில் முன்பு அதிகமாகக் கள்ளிக் காடுகள் இருந்ததால், அது “கள்ளிக்காடு” என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கள்ளக்குறிச்சி என்று மாறியிருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. மேலும் இன்னொரு காரணமாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வசித்து வந்ததாலும், அந்தக் காலத்தில் அவர்கள் குடிசைகளில் வசித்து வந்ததாலும், “கள்ளர் குடிசை” என்று அழைக்கப்பட்டு,பின்னர் அது “கள்ளக்குறிச்சி” என்று மாறியது.

error: Content is protected !!