News September 23, 2024
335 மனுக்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
கிருஷ்ணகிரி, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 335 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Similar News
News November 20, 2024
பாராட்டு தெரிவித்த அமைச்சர், ஆட்சியர்
ஒரப்பம் ஊராட்சி, ஜெய் ஸ்ரீ கல்யாண மண்டபத்தில், நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் பரிசுத்தொகை பெற்ற வீரர், வீராங்கனைகளை நேற்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, பாராட்டுக்களை தெரிவித்தனர்.
News November 19, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு
போச்சம்பள்ளி வட்டத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மக்களிடம் நேரடியாக சென்று கள ஆய்வு நடைபெற உள்ளது. இந்த கள ஆய்வு நாளை காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 19, 2024
கிருஷ்ணகிரியில் 22-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.