News September 23, 2024
தி.மலையில் பந்தக்கால் முகூர்த்த விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா, டிச.4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. டிச.13ஆம் தேதி மாலை திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
Similar News
News November 20, 2024
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
100 நாள் பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு
வந்தவாசி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் செய்யும் பணியையும், அங்கு 100 நாள் பணியாளர்கள் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார். மேலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
News November 20, 2024
இன்று முதல் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
பிர்சா முண்டாவின் 150- வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பழங்குடியினர் தின விழா கொண்டாடும் விதமாகமாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர்,செங்கம், தண்டராம்பட்டு,கலசப்பாக்கம்,போளூர்,ஆரணி, சேத்துப்பட்டு,செய்யாறு,வெண்பாக்கம்,வந்தவாசி,ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாஅலுவலகங்களில் இன்று 20-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பழங்குடியினருக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.