News September 23, 2024
பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணி அசத்தல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், கல்லுாரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி நேற்று நடந்தது. இறுதிப்போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணியினர், சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அணியை 17-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. வாழ்த்தலாமே!
Similar News
News August 23, 2025
காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஓரகடம் மற்றும் வெள்ளை கேட் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) முதல் இன்று (ஆகஸ்ட் 23) விடியற்காலை வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
News August 23, 2025
காஞ்சிபுரம்: மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!