News September 22, 2024
‘96 – பார்ட் 2’ காதல் கதை இல்லையாம்..!

‘96’ படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை 90% முடித்துவிட்டதாக இயக்குநர் பிரேம்குமார் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மேலும், இந்த கதையை விஜய்சேதுபதியின் மனைவியிடம் சொல்லிவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், 2ஆம் பாகம் காதலை மையப்படுத்திய படமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரேம்குமார், இது ஃபேமிலி சென்டிமெண்டை பேசும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News August 10, 2025
வாக்காளர்கள் நீக்கத்திற்கான காரணம் கூற முடியாது: ECI

பிஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என SC-ல் ECI பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டியது கட்டாயமல்ல எனவும் நீக்கத்திற்கான காரணம் குறித்து கூறமுடியாது எனவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம்(ECI) இந்த முடிவை தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News August 10, 2025
எதுக்கு! டாப் 7 வித்தியாசமான, விசித்திர சட்டங்கள்!

கேட்டால் வித்தியாசமாக, விசித்திரமாக தோன்றும். ஆனால், உலகின் பல இடங்களிலும் அப்படியான சில சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அப்படி உலகின் வித்தியாசமான சட்டங்களில் ‘டாப் 5’ மேலே உள்ள அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். நீங்கள் கேள்விப்பட்ட சில விசித்திரமான சட்டங்களை கமெண்டில் பதிவிடவும். இதில் எந்த சட்டம் உங்களுக்கு ரொம்ப விசித்திரமாக தெரிகிறது.
News August 10, 2025
எதனால் நிறுத்தப்பட்டது ISL? முழு விவரம்

கால்பந்தை பிரபலப்படுத்த AIFF(இந்திய கால்பந்து சம்மேளனம்) ரிலையன்ஸின் FSDL (Football Sports Development Limited) நிறுவனத்துடன் 2010-ல் 15 வருட ஒப்பந்தம் போட்டது. இதற்கு ₹50 கோடியை AIFF-க்கு FSDL கொடுக்க வேண்டும். 2014-ல் தொடங்கப்பட்ட ISL பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், டிசம்பரில் முடியும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க FSDL தயாராக இல்லை. அதனால் தொடர் நடக்குமா என்ற இழுபறி நீடிக்கிறது.