News September 22, 2024
“CM ஆக தமிழ்நாட்டில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன்”

திமுக எம்.பி தயாநிதி மாறன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சராகும் ஆசையில் 3 மாதங்கள் தமிழகத்தில் டேரா போட்டவர் தான் நிர்மலா சீதாராமன். அடிமைகளின் ஆட்சியை வீழ்த்தலாம் என்று நினைத்தனர். அப்போது அவர், இந்தாண்டு நீட் இருக்காது. அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறினார்.
Similar News
News August 7, 2025
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கண்காட்சி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் 11 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சியர், பவன்குமார் திறந்து வைத்து பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06.08.2025) வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், மண்டல அளவில் பதிவுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஆகியோர் உள்ளனர்.