News September 22, 2024
வெள்ளை அறிக்கை கோருவதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது தவறில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து இபிஎஸ் உள்ளிட்டோர் அறிக்கை கோருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம், அதிமுக ஆட்சியில் கையெழுத்தான ஒப்பந்தம், வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கையை இபிஎஸ் முதலில் வெளியிட வேண்டும் என்றார்.
Similar News
News August 22, 2025
மீண்டும் குண்டை தூக்கி போட்ட அமித்ஷா..!

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது EPS-ன் கருத்து. இந்த மோதல்போக்கு சில காலம் தணிந்திருந்த சூழலில், நெல்லையில் பேசிய அமித்ஷா மீண்டும் குண்டை தூக்கி போட்டுள்ளார். கூட்டணி ஆட்சிதான் அமையும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News August 22, 2025
உலக சாதனை படைத்த பிரீட்ஸ்கி

ODI-யில், அறிமுகமான முதல் 4 போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை, தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த (150 vs NZ) அவர், அதன்பின் 83 vs பாக்., 57 vs ஆஸி., 88 vs ஆஸி (நேற்று) என 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானவுடன் தொடர்ந்து 4 அரை சதங்கள் (ஆனால் 5 போட்டிகள்) அடித்திருந்தார்.
News August 22, 2025
சோழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் மோடி

PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் மோடி என்றும், காசி சங்கம விழா தமிழுக்கு பெருமை சேர்க்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், மோடி தமிழ் மண்ணையும் மக்களையும் எப்போதும் மதிப்பவர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.