News September 22, 2024
வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர்

பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில்களுக்கு தேவையான நெய், ஆவின் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்படவேண்டுமென ஆணையரால் 2021-ம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்ற அவர், பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதாவை சேர்ந்த வினோஜ், செல்வக்குமார் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News August 22, 2025
Beauty Tips: முகத்துல பருக்கள் இருக்கா? இதோ Simple தீர்வு!

வறண்ட சருமம், சுருக்கங்கள், முகப்பருனால கஷ்டப்படுறீங்களா? இதுக்கான தீர்வு உங்க கிட்சன்லயே இருக்கு. சருமப் பிரச்னைகள்ல இருந்து விடுபட கறிவேப்பில்லை மாஸ்க்கை நீங்க Try பண்ணலாம். இதுக்கு, கறிவேப்பிலைய நன்கு அரைத்து, அத தேன், கற்றாழை ஜெல், அல்லது மஞ்சள் கூட கலந்து முகத்துல போட்டு அத 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்க. இதுல இருக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகத்துல இருக்க பிரச்னைகளை போக்கிடும். SHARE.
News August 22, 2025
டாப் 5 இந்திய ரக நாய்கள் என்னென்ன?

தெருநாய்கள் தொடர்பான SC தீர்ப்பு தேசிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு செல்லப்பிராணிகள் வளர்ப்போர், விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம், நாட்டு நாய்கள் குறித்தான தேடலும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த நாய் வகைகளும், அவற்றின் பிறப்பிடமும் மேலே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகை நாய் வளர்க்கிறீர்கள்?
News August 22, 2025
விஜய் மனைவியின் சொத்து இவ்வளவு கோடியா..!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சங்கீதாவின் தந்தை சோர்ணலிங்கம், இங்கிலாந்தில் பிரபல தொழிலதிபராக உள்ளார். தந்தையின் தொழிலால் ஆடம்பரமான பொருளாதார சூழலில் சங்கீதா வளர்ந்திருக்கிறார். ZEE NEWS தகவல்படி, அவரது சொத்து மதிப்பு ₹400+ கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கணவன் விஜய் சினிமாவில் கொடிகட்டி பறந்தபோதும், சங்கீதா சினிமா வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.