News September 21, 2024
மாட்டு வியாபாரி அடித்துக் கொலை

வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்த மாட்டு வியாபாரி சோலையப்பனுக்கும் (60), தாயில்பட்டி பால்ராஜுக்கும் மாடு வாங்கி விற்பதில் முன்பகை இருந்துள்ளது. இதனால் பால்ராஜ் உள்ளிட்ட 5 பேர் சோலையப்பனை கம்பு, கற்களால் தாக்கினர். காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சோலையப்பன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி பால்ராஜ், வரதராஜ், பாலா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 20, 2025
விருதுநகர் மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

விருதுநகர் மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: அருப்புக்கோட்டை:04566-240101, ராஜபாளையம்:04563-220101, சாத்தூர்:04562-264101, சிவகாசி: 04562-220101, ஸ்ரீவி.,: 04563-265101, விருதுநகர்:04562-240101 இங்கு <
News October 20, 2025
விருதுநகர்: மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயற்சி

விருதுநகர் டிசிகே பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரின் கடைக்கு நேற்று காலை வந்த பட்டு ராஜா அரை பவுனில் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார். வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
News October 20, 2025
விருதுநகரில் 61 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்

விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து தொடர்ந்து 61 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சருடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 61 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.