News September 21, 2024
நீலகிரியில் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு

ஊட்டி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் 35 மகளிர் குழுவினருக்கு தலா ரூ.5 லட்சம் கடன் வழங்க திட்டமிட்டு நேற்று அதை காசோலையாக வழங்கப்பட்டன. இதற்காக தலா ரூ.42,000 லஞ்சம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., ஜெயகுமார் தலைமையில் சென்ற குழுவினர் கணக்கில் வராத ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழியர்கள் யாமினி, பிரேமலதா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 13, 2025
நீலகிரி: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நீலகிரி மக்களே, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில், காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி ( PNB Local Bank Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்தில் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் <
News November 13, 2025
நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், நாளை காலை 10 மணி முதல் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உள்ள, கீழ்த்தர கூட்ட அரங்கில், சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் முன்னாள் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க உள்ளனர் என, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
குன்னூரில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குன்னுார் பழைய ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், உமாராணி தம்பதி. இவர்கள் கடந்த மாதம், 27ல் அன்னுாரில் உள்ள உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று, 29ல் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ‘நேற்று வீட்டில் உள்ள நகையை அடமானம் வைக்க, பீரோவில் பார்த்த போது, 31 பவுன் வரை நகைகள் காணவில்லை,’ என, குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


