News September 21, 2024
ரூ.14,000 உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி

தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. மெக்கானிக் டீசல், எலக்ட்ரீஷியன், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு ரூ.14,000 மாத உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேர செப்.29ஆம் தேதி குரோம்பேட்டை போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 15, 2025
சென்னையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் வருகிற 21ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாக பணிகள் தொடர்பான முடிவுகள்,நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா குறித்தும்,சினிமாவில் பொன்விழா கண்ட ரஜினிகாந்த் மற்றும் எம்பியாக பதவியேற்றுள்ள கமலஹாசனுக்கும் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாகவும் பேச உள்ளனர்.
News September 15, 2025
கே.கே.நகரில் விழுந்த ராட்சத மரம்

சென்னை, கே.கே.நகர் 80 அடி சாலையில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணியின் போது பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. அப்போது, பள்ளம் தோண்டும் போது மரத்தின் வேர்களை வெட்டியதால் பிடிமானம் இல்லாமல் சற்றுமுன் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
News September 15, 2025
தயார் நிலையில் மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் ரிப்பன் கட்டட வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.