News September 20, 2024

தேவைப்பட்டால் மீண்டும் போராட்டம்: மருத்துவர்கள்

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் கேட்டு போராடிவந்த ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர். நாளை முதல் கொல்கத்தாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவையை வழங்க உள்ளதாக கூறிய அவர்கள், எனினும் மருத்துவ கல்லூரிகளில் தங்கள் போராட்டம் தொடரும் என்றனர். நியாயம் கிடைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்றும் கூறியுள்ளனர்.

Similar News

News August 22, 2025

கபில்தேவ் பொன்மொழிகள்

image

*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது.
* உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.

News August 22, 2025

அதிமுக – பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணி: வன்னியரசு

image

அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பார்ட்னராக விஜய் செயல்படுகிறார் என வன்னியரசு விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு வைக்கும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். அதை செய்யாமல் இபிஎஸ் முன்மொழிந்ததை வழிமொழிந்தனர் மூலம் அதிமுகவுடன் தவெக மறைமுக கூட்டணி வைத்திருப்பது அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

ஆவணி அமாவாசையான இன்று என்ன செய்யலாம்?

image

ஆவணி அமாவாசையான இன்று வழங்கப்படும் தானங்கள் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும் நற்கதியையும், புண்ணியங்களையும் வழங்குமாம். ஆதலால் இன்றைய நாளில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையோ அல்லது அன்னதானமாகவோ வழங்கலாம். கோயிலுக்கு நெய் நிரப்பிய விளக்குகள், எண்ணெய், வெல்லம், பருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகள் ஆகியவற்றை வழங்கினால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என நம்பப்படுகிறது.

error: Content is protected !!