News September 20, 2024
நீதிபதியின் சர்ச்சை கருத்து.. ரிப்போர்ட் கேட்ட SC

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தா, பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டார். மேலும், ஒரு பெண் வழக்கறிஞருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கர்நாடகா உயர்நீதிமன்றம் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய SC கேட்டுக் கொண்டது.
Similar News
News August 22, 2025
அதிமுக – பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணி: வன்னியரசு

அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பார்ட்னராக விஜய் செயல்படுகிறார் என வன்னியரசு விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு வைக்கும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். அதை செய்யாமல் இபிஎஸ் முன்மொழிந்ததை வழிமொழிந்தனர் மூலம் அதிமுகவுடன் தவெக மறைமுக கூட்டணி வைத்திருப்பது அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
ஆவணி அமாவாசையான இன்று என்ன செய்யலாம்?

ஆவணி அமாவாசையான இன்று வழங்கப்படும் தானங்கள் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும் நற்கதியையும், புண்ணியங்களையும் வழங்குமாம். ஆதலால் இன்றைய நாளில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையோ அல்லது அன்னதானமாகவோ வழங்கலாம். கோயிலுக்கு நெய் நிரப்பிய விளக்குகள், எண்ணெய், வெல்லம், பருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகள் ஆகியவற்றை வழங்கினால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என நம்பப்படுகிறது.
News August 22, 2025
எல்லாராலும் MGR ஆக முடியாது: விஜய் பற்றி ஜெயக்குமார்

தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் எம்ஜிஆர் குறித்து விஜய் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய EX அமைச்சர் ஜெயக்குமார், இது ஒரு தேர்தல் யுக்தி என்றும், வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, எம்ஜிஆர் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவதாக விமர்சித்தார். எல்லோராலும் MGR, ஜெயலலிதா ஆகிவிட முடியாது எனக் கூறிய அவர், இரட்டை இலைக்கு வாக்களித்த கை, ஒரு காலத்திலும் வேறு கட்சிக்கு வாக்களிக்காது என்றார்.