News September 20, 2024

விழுப்புரம் அருகே கணவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு

image

விழுப்புரம் புதுப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரதாப். கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று பிரதாப், அவரது தாய், சிறுமியின் தாய் மற்றும் தந்தை நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 30, 2025

விழுப்புரம் : ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

image

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் <>இந்த<<>> லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணிநீக்கம்

image

விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட் இன்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News August 30, 2025

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்.

image

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, விழுப்புரம் – நாகை இடையே செப்.8 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

error: Content is protected !!