News September 20, 2024
தலையில் அம்மிக்கல்லை போட்டு வாலிபர் கொலை

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்(25). நேற்று முன்தினம், கலைவாணன் மது அருந்திவிட்டு வீட்டுற்கு சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி சௌந்தர்யா(25), அவரைத் திட்டி வெளியே படுக்க சொல்லிவிட்டார். வெளியே வந்த கலைவாணன் அவர்களுடைய மாடியில் வசித்து வரக்கூடிய சரளா என்ற பெண்ணை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த சரளாவின் மகன், கலைவாணனின் தலையில் கல்லை போட்டுக் கொன்றுள்ளனர்.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 18, 2025
மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள்

மாமல்லபுரம் கடலில் நேற்று (ஆக. 18) தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குனர் அப்ரஜிதா சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கடற்கரை கோயில் அருகில் படகில் சென்று நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் கடலில் மூழ்கிய 6 கோவில்களில் 1 கோயிலின் தடயங்கள் பாசியுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <