News September 20, 2024
சேலம்: 17 வயது சிறுமியின் காதல் கணவர் மீது போக்சோ!

கெங்கவல்லி பகுதியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு 17 வயது என தெரிந்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பிளஸ் 1 படித்துக்கொண்டிருந்தபோதே அதே பகுதியை சேர்ந்த 21 வயதான வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News July 8, 2025
‘அய்யா கேட்டால் இங்கேயே உயிரை விடுவேன்’

திண்டிவனத்தில் நடந்த பா.ம.க.வின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், “என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கோ, பொறுப்புகளை மாற்றுவதற்கோ அதிகாரமிக்கவர் மருத்துவர்.அய்யா மட்டுமே. 36 ஆண்டுகளாக அவர் காலில் கிடக்குறேன். அருளு உன் உயிர் வேண்டும் என்று அய்யா கேட்டார், இப்போதே உங்கள் முன் கழுத்தை அறுத்து உயிரை விடுவேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.
News July 8, 2025
தீரா கடன்களை தீர்க்கும் நங்கவள்ளி கோயில்!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்ம சாமி- சோமேஸ்வரசாமி கோயில் உள்ளது. இது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலாகும். இங்கு நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். இதை SHARE பண்ணுங்க.
News July 8, 2025
2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190) இன்றும் (ஜூலை 08), நாளையும் (ஜூலை 09) போத்தனூர்-கோவை-இருகூர் மார்க்கத்திலும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) இன்றும், நாளையும் கோவைக்கு செல்லாமல் போத்தனூர்-இருகூர் மார்க்கத்தின் வழியே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது எனவே இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ளுமாறு வேண்டுகோள்!