News September 20, 2024
உள்ளாட்சி தேர்தலில் காங்., தனித்து போட்டி?

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், உள்ளாட்சி தேர்தலில் 20% இடங்களை தந்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம், இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு ஒருசேர வலியுறுத்தினர். திருமாவை போல் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், திமுக அமைச்சர்கள் காங்கிரசாரை கண்டுகொள்வதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
Similar News
News August 22, 2025
ரேஷன் கார்டில் இனி பொருள்கள் வாங்க முடியாதா?

ஏழைகளுக்கு மானிய விலை உணவு தானியத்துடன், 5 கிலோ இலவச தானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வசதியான பலரும் இச்சலுகை பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இதனை கண்டறிந்து நீக்கும் வகையில், வருமானவரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட வசதியானோரின் பெயர்களை கண்டறிந்து நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பலரின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
News August 22, 2025
முதுகுவலியை தவிர்க்க… இதை ட்ரை பண்ணுங்க

அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்னையாக முதுகுவலி உள்ளது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட தொலைவு பயணம், கனமான பையை சுமப்பது போன்றவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, *30 mins-க்கு ஒருமுறை, உட்கார்ந்த இடத்திலிருந்தே திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடை போன்ற பயிற்சிகளை செய்யலாம். *பாயில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.
News August 22, 2025
சுபான்ஷு சுக்லாவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

சர்வதேச விண்வெளி மையம் சென்று ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதுகுறித்து X பக்கத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ககன்யான் திட்டம், சுக்லாவின் விண்வெளி பயணம், விண்வெளியில் அவர் மேற்கொண்ட முக்கிய சோதனைகள் குறித்து விவாதித்தாகவும், அவரது சாதனைகளால் தேசம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.