News September 20, 2024
இராமநாதபுரம் அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
2025 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், தொகுதி மாற்றம் தொடர்பாக மக்களிடம் பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் சிம்ரன்ஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
மாலை 4 மணி நிலவரப்படி 1,641 மிமீ மழை பொழிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 வரை ராமேஸ்வரம் 411, தங்கச்சிமடம் 322, மண்டபம் 261, பாம்பன் 237, ராமநாதபுரம் 75, கடலாடி 71.20, வட்டாணம் 65.60, முதுகுளத்தூர் 48.20, கமுதி 45.80, பள்ளமோர்குளம் 45. 20, பரமக்குடி 25.60, திருவாடானை 11.80 என மாவட்டம் முழுவதும் 1,641.80 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் இருந்த குடிசைகளை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது.
News November 20, 2024
பாம்பனில் மேக வெடிப்பால் மிக கனமழை
ராம்நாடு மாவட்டம் பாம்பனில் மிகக்குறுகிய இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக கனமழை பெய்துள்ளது. மேகவெடிப்பால் பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாம்பனில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மிக குறுகிய இடத்தில் வலுவான மேக கூட்டங்களால் மேக வெடிப்பு நிகழ்ந்து கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ராமநாதபுரத்தில் அதிகனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.