News September 20, 2024
மீண்டும் நம்பர் 1 இடத்தில் TCS..!

உலக அளவில் TCS நிறுவனத்திற்கு என்று ஒரு தனிப் பெயரும், மரியாதையும் உண்டு. பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளில் TCS ஈடுபட்டதில்லை என்பதும் இதற்கு காரணம். இந்நிலையில், Kantar Brandz வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே அதிக பண மதிப்புக் கொண்ட நிறுவனங்களின் (Most Valued Brand) பட்டியலில் 49 பில்லியன் டாலர்களுடன் TCS முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த இடத்தை TCS தக்க வைத்துள்ளது.
Similar News
News August 18, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪துணை <<17440516>>ஜனாதிபதி <<>>தேர்தல்.. திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்
✪மனசாட்சி உள்ள <<17440212>>மக்களாட்சியை <<>>நோக்கி.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
✪ஏற்றத்தில் <<17439680>>பங்குச்சந்தை<<>>.. 1,084 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
✪<<17439383>>உக்ரைன் <<>>NATO-வில் சேரக்கூடாது.. டிரம்ப்
✪₹400 கோடி <<17439244>>வசூலை<<>> அள்ளிய ‘கூலி’
News August 18, 2025
பிழையை திருத்திக் கொள்ள திமுகவுக்கு வாய்ப்பு: நயினார்

2002-ல் ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் களமிறங்கியபோது, திமுக எதிராக வாக்களித்தது. இந்நிலையில், மாபெரும் சாதனை தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக, அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது. அதை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரை (CPR) DMK ஆதரிக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.
News August 18, 2025
பிறப்பு மட்டுமே இல்லாத ஒரு போர்வீரன்!

‘ரத்தத்தை கொடுங்கள்.. நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்’ என முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகின் கண்களில் இருந்து மறைந்த தினம் இன்று. அவரால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தில்(INA) இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆகஸ்ட் 18, 1945-ல் தைவானில் விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.