News September 19, 2024

கம்பீரை நம்புகிறேன்: டிராவிட்

image

கம்பீரின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு பலன் அளிக்கும் என நம்புவதாக டிராவிட் தெரிவித்துள்ளார். ஒரு வீரராக கம்பீர் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளதாகவும், பயிற்சியாளராக சிறிது காலம் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு சூழலிலும், ஒருவர் தன்னுடைய அனுபவங்களையும், திறனையும் வெளிப்படுத்துவார் என்பதால், கம்பீரின் அனுபவங்கள் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 11, 2025

BREAKING: தங்கம் விலை ₹560 குறைந்தது

image

கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹75,000-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹9,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹-1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 11, 2025

EC நீதிமன்றம் அல்ல: ப.சிதம்பரம் காட்டம்

image

புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம்(EC), நீதிமன்றம் போல் செயல்பட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க நிர்வாக அமைப்புதான் EC என்றும் கூறியுள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரை நிராகரிக்க முடியாது என தெரிவித்த அவர் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் EC கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 11, 2025

காசாவில் கொல்லப்பட்ட 5 பத்திரிகையாளர்கள்

image

காசாவின் அல்-ஷிஃபா ஹாஸ்பிடலுக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அல்ஜசிராவின் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிஃப் தீவிரவாதி என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இறப்புக்கு முன்னர் ஷெரிஃப் எழுதிய உருக்கமான கடிதத்தை அவரது நண்பர் X தளத்தில் பகிர்ந்துள்ளார். 22 மாத போரில் இதுவரை 200 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.

error: Content is protected !!