News September 19, 2024

புதுக்கோட்டை மீனவர்களுக்கு சிறை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த காரணத்தினால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் நான்கு பேருக்கு அக்டோபர் இரண்டாம் தேதி வரை சிறை தண்டனை விதித்து இன்று இலங்கை நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. இதனால் சமூக அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மீனவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டு வருகிறது.

Similar News

News August 23, 2025

இந்திய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அழைத்து பேசி தீர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஆதரவு போராட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மண்டல தொழிலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

News August 22, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்  

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 22, 2025

புதுகை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 1757 என்ற எண்ணை அழைக்கலாம். இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!