News September 18, 2024

தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (செப்.20, 21) கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், தி.மலை, போளூர் ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 125 மற்றும் சனிக்கிழமை 125 என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 30, 2025

விழுப்புரம்: தொழில் தொடங்க 50% மானியம் APPLY NOW

image

விழுப்புரம் மக்களே நாட்டு கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு 50% மானியம் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பண்ணை அமைப்பதற்கான மொத்த செலவில் பாதி அரசு மானியமாக வழங்கப்படும். மேலும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகளையம் இலவசமாக இதில் பெறலாம். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு <<17560731>>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 30, 2025

தொழில் தொடங்க 50% மானியம் APPLY NOW

image

கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற, 625 சதுர அடி நிலம் வேண்டும். இந்த நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் நகல் மற்றும் மின் இணைப்பு அவசியம். குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பண்ணை தள்ளி இருக்க வேண்டும். பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். கோழிப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க

News August 30, 2025

அமெரிக்க வரி விதிப்பால் இறால் ஏற்றுமதி பாதிப்பு

image

விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இறால் பண்ணை விவசாயிகள், அமெரிக்காவின் 50% இறக்குமதி வரியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இறால் தேக்கமடைந்துள்ளது. இறால் பண்ணைத் தொழிலைக் காக்க, அரசு மாற்று ஏற்றுமதி சந்தைகளை கண்டறிய வேண்டும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!