News September 18, 2024

INDvsBAN போட்டி: ₹200க்கு டிக்கெட்

image

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான குறைந்த விலை டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் 5 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள், தினசரி காலை 7 மணிக்கு மைதான கவுன்டரில் விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ₹200 மட்டுமின்றி ₹400, ₹1000 கட்டண டிக்கெட்களையும் பெறலாம். ஆன்லைனில் ₹1,000 முதல் 15,000 வரை தனியாக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

Similar News

News August 10, 2025

ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? காங்., MP கேள்வி

image

துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின் ஜக்தீப் தன்கரை ஏன் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என காங்., MP கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா எனவும், அவர் இருக்கும் இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்கருடன் எந்த தொடர்பும் இல்லாததால் நாட்டு மக்கள் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் மமிதா

image

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு ஒப்பந்த செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அட்லியின் உதவி இயக்குநர் சிவா என்பவர் இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, அர்ஜித் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

News August 10, 2025

திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: வைகோ உறுதி

image

மதிமுக, திமுக கூட்டணியில் உள்ளது; அங்கேயே தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, NDA கூட்டணியில் மதிமுக இணைய உள்ளதாகவும், துரை வைகோவுக்கு மத்திய அமைச்சராகும் ஆசை இருப்பதாகவும் மல்லை சத்யா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இதனை முற்றிலும் மறுத்துள்ள வைகோ, தான் எப்போதும் கூட்டணி தர்மத்தை மதிப்பவன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!