News September 18, 2024
புத்தகம் பேசுகிறது: அரங்க வெளியில் பெண்கள்

இதிகாச காலத்தில் தொடங்கி நவீன காலம் வரையிலான நாடகங்களில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை ‘அரங்க வெளியில் பெண்கள்’ நூலில் இளம்பிறை விரிவாக ஆய்வு செய்துள்ளார். நாடகங்களில் பெண்களின் பாத்திரப் படைப்பு, பங்கு போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. சமத்துவத்திற்கான பெண் நிகழ்த்துக் கலைஞர்களின் போராட்டங்களும் நாடகவியலாளர்கள் மங்கை, கலைராணி போன்றோரது கருத்துகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News August 10, 2025
அமைச்சரின் பேச்சால் தூய்மை பணியாளர்கள் அதிருப்தி

‘பணி நிரந்தரம்’ செய்யக்கோரி, தூய்மைப்பணியாளர்கள் தலைநகரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதன்பின் அவர், ‘பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே என பேசியிருந்தார். அதேபோல், பேச்சுவார்த்தையின்போது அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
News August 10, 2025
வசூலை அள்ளும் ‘மகாவதார் நரசிம்மா’!

சாமி படத்தை அனிமேஷனில் யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்தவர்களின் கணிப்பை ‘மகாவதார் நரசிம்மா’ மாற்றிவிட்டது. படம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து தற்போது வரை ₹150 கோடி வசூலை குவித்துள்ளது. யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவான இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த 6 படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றை பிரமாண்டமாக தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது ஹொம்பாலே பிலிம்ஸ். நீங்க படம் பாத்துட்டீங்களா?
News August 10, 2025
நேரம் பார்த்து பேசு!

காட்டில் ஒரு சிங்கம், ‘என் வாயில் துர்நாற்றமா?’ என ஆடு ஒன்றிடம் கேட்டது. ‘ஆமாம்’ என ஆடு கூற, கோபத்தில் உடனே சிங்கம் ஆட்டை கொன்றது. இதே கேள்வியை ஓநாயிடம் சிங்கம் கேட்ட, அது ‘இல்லை’ என்றது. ‘பொய் சொல்கிறாய்’ என அதையும் கொன்றது. நரியிடம் கேட்ட போது, ‘எனக்கு ஜலதோஷம், அதனால் வாசனை தெரியவில்லை’ எனக் கூறி உயிர் தப்பியது. புத்திசாலிகள் எப்போது, என்ன பேச வேண்டும் என அறிவார்!