News September 18, 2024
JUST IN: அறிவாலயத்திற்கு படையெடுக்கும் தொண்டர்கள்

திமுக மூத்த தலைவர்களுடன் 1 மணி நேரமாக CM ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என மூத்த தலைவர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நேற்று திமுக பவள விழா மேடையிலேயே கோரிக்கை வைத்தார். இதற்கு கூட்டத்தில் பெரும் ஆதரவு அலை எழுந்தது. தொடர்ந்து, இன்று அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் CM ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு, இனிப்புகளுடன் படையெடுத்துள்ளனர்.
Similar News
News August 10, 2025
திமுகவிடம் பொதுத்தொகுதிக்கு பாடுபடும் திருமா: சீமான் தாக்கு

தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளது; இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமா என்ன பாடுபடுகிறார். பொதுக்குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்கக்கூடாது என்பதுபோல் பொதுத்தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படக்கூடாது என்று திமுக சொன்னது பதிவாகியுள்ளது எனவும் சாடினார்.
News August 10, 2025
பும்ராவிற்கு எதிராக கிளம்பும் முன்னாள் வீரர்கள்

பும்ரா தனது விருப்பத்திற்கேற்ப டெஸ்ட்டில் பங்கேற்பது குறித்து முன்னாள் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். IND vs ENG தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என பும்ரா கூறியதை வேறு ஒருவர் கூறியிருந்தால், இந்நேரம் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என ரஹானேவும், ஓய்வு இல்லாமல் பந்துவீசும் சிராஜ் போன்ற வீரர்கள் தான் அணிக்கு தேவை என கபில் தேவும் தெரிவித்துள்ளனர்.
News August 10, 2025
இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் ‘சலபாசனம்’

✦இடுப்பு தசைகள் வலுப்பெறும்.
✦தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையில் பட, கைகளை உடலுக்குப் பக்கவாட்டில் நீட்டவும்.
➥கழுத்து, கால் & தொடைகளை மெதுவாக மேலே தூக்கவும். இந்த நிலையில் 15-30 விநாடிகள் இருந்து, பின் பழைய நிலைக்குத் திரும்பவும்.
✦செரிமான மண்டலம் மேம்படுகிறது.
✦ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.