News September 18, 2024

கழன்று ஓடிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்

image

திருச்சி அருகே சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ரயில் நிலையத்திற்கு சில கிலோ மீட்டர் துாரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கழன்ற பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மீண்டும் இணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். 30 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.

Similar News

News August 10, 2025

இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் ‘சலபாசனம்’

image

✦இடுப்பு தசைகள் வலுப்பெறும்.
✦தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையில் பட, கைகளை உடலுக்குப் பக்கவாட்டில் நீட்டவும்.
➥கழுத்து, கால் & தொடைகளை மெதுவாக மேலே தூக்கவும். இந்த நிலையில் 15-30 விநாடிகள் இருந்து, பின் பழைய நிலைக்குத் திரும்பவும்.
✦செரிமான மண்டலம் மேம்படுகிறது.
✦ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

News August 10, 2025

பாமகவால் திமுகவை வீழ்த்த முடியாது: மனோ தங்கராஜ்

image

2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், ‘அன்புமணியின் ஆணி வேரே உடைந்து இருக்கிறது; அடுத்த தேர்தலுக்கு பிறகு பாமக என்ற கட்சி இருக்காது’ என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அன்புமணி நினைத்தால் எல்லாம் திமுகவை வீழ்த்த முடியாது; 2026-ல் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

News August 10, 2025

நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது: ஜெலன்ஸ்கி

image

போர் நிறுத்தத்திற்காக தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தங்கள் மக்களுக்கு கவுரவமான சமாதானம் வேண்டும், உக்ரைன் இல்லாமல் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் புடினை சந்தித்து பேச உள்ள நிலையில், நிலப்பகுதி பரிமாற்றங்கள் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.

error: Content is protected !!