News September 18, 2024
Finance Tips: இந்த தளங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யுங்கள்!

Digital Transactions அதிகரித்திருப்பதால், மோசடிகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக Online ஷாப்பிங் செய்வோரிடம் அவர்களுக்கே தெரியாமல் கார்டில் (cr & dr) இருந்து பணத்தை எடுக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்து, தனிப்பட்ட வங்கி தகவலை உள்ளிடாதீர்கள். ‘HTTPS’ கொண்ட Encrypted இணையதளங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யுங்கள்.
Similar News
News August 10, 2025
இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் ‘சலபாசனம்’

✦இடுப்பு தசைகள் வலுப்பெறும்.
✦தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையில் பட, கைகளை உடலுக்குப் பக்கவாட்டில் நீட்டவும்.
➥கழுத்து, கால் & தொடைகளை மெதுவாக மேலே தூக்கவும். இந்த நிலையில் 15-30 விநாடிகள் இருந்து, பின் பழைய நிலைக்குத் திரும்பவும்.
✦செரிமான மண்டலம் மேம்படுகிறது.
✦ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
News August 10, 2025
பாமகவால் திமுகவை வீழ்த்த முடியாது: மனோ தங்கராஜ்

2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், ‘அன்புமணியின் ஆணி வேரே உடைந்து இருக்கிறது; அடுத்த தேர்தலுக்கு பிறகு பாமக என்ற கட்சி இருக்காது’ என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அன்புமணி நினைத்தால் எல்லாம் திமுகவை வீழ்த்த முடியாது; 2026-ல் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
News August 10, 2025
நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது: ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தத்திற்காக தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தங்கள் மக்களுக்கு கவுரவமான சமாதானம் வேண்டும், உக்ரைன் இல்லாமல் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் புடினை சந்தித்து பேச உள்ள நிலையில், நிலப்பகுதி பரிமாற்றங்கள் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.