News September 18, 2024
கடனா அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனாநதி அணைக்கு நீர்வரத்து ஆனது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 கனஅடியாக சரிந்துள்ளது. ராமநதிக்கு 23 கன அடி ஆகவும், கருப்பா நதிக்கு 5 கன அடியாகவும், குண்டார் அணைக்கு 38 கன அடி ஆகவும் அடவிநயினார் கோவில் அணைக்கு 17 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News October 4, 2025
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்டம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி,புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று (04.10.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
தென்காசி: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: C<
News October 4, 2025
தென்காசி: கார் மோதி முதியவர் பலி

களக்காடு பகுதியை சேர்ந்த கிஷோர் சந்துரு என்பவர் இன்று அக்.4 நண்பர்களுடன் குற்றாலம் சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையை கடந்த மருதம்புத்தூரை சேர்ந்த இசக்கி முத்து (70) என்பவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.